சித்தர்கள் என்பவர் யார் ??
ஓம் நம சிவாய
- மெய்ஞ்ஞானத்தை நோக்கி தேடுகின்ற மனிதர்களை குறிக்கும் சொல் சித்தன் ,சித்தர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர் ...'உலகியலை துறந்தவர்கள்' ,இதில்
1.வைத்தியம்,
2.வான சாஸ்திரம்,
3.மாந்திரீகம்,
4.இரசவாதம்,
5.சூத்திர சாஸ்திரம்,
6.யோகம்
போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்களையும் சித்தர்கள் என்றும் கூறலாம்..
சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான்..
மூவகை கட்டுப்பாடுகள்
- மூச்சை அடக்குதல் (பிராணாயாமம் ),
- விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வெல்லுதல் ,
- மனதை அடக்குதல் (ஆசைஅற்ற நிலை )
இதன் மூலம் பெரும் சக்திகளை கொண்டு பல அஷ்டமாசித்துகள் செய்ய வல்லவர்கள் சித்தர்கள் ..
இத்தகைய சிறப்பு மிக்க 18 சித்தர்களை பற்றி விரிவாக பார்ப்போம் ...
அடுத்த பதிவில் ....
"தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "
Super
ReplyDelete